home
என்னை பற்றி சில துளிகள்
- Ravichandran
- jaffna kopay, hindu, Sri Lanka
- என் உள்ளத்தில் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் கவிதைகளை உயிர் கொடுத்து களம் அமைத்து என்றோ ஒரு நாள் அதை வெளி கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை .அந்த வகையில் எனக்கும் மட்டும் அல்லாது என்னை போன்ற படைப்புக்களை வளங்க ஆர்வமுள்ள அனைவரிற்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது படைப்புகளை பிரசுரிப்பதில் மகிழ்வடைகிறேன். சி.ரவிச்சந்திரன்
Total Pageviews
Saturday, February 18, 2012
கலைந்த பொழுதுகள்
மாலைநேரம் என் மனதின் ஓரம்
சாலையின் சோலை ஓரத்தில்
இதம் தரும் இனிய நினைவுகள்
மீண்டும் என் கண் முன்னே
வலிகள் கூட சுகங்களானது
சுகங்கள் கூட வலிகள் ஆனது
ஆறாத ரணங்களும் ஆற்ற முடியாத சோகங்களும்
அன்று மட்டும் ஏனோ எனை விலத்தி வெகு தூரத்தில்
எழுந்திரு என்று அம்மாவின் குரல் கேட்டு ஏக்கத்துடன் தூக்கத்தில்ல் இருந்து எழுந்தேன்
பாவம் என் அம்மாக்கு எங்கே புரிய போகிறது"இது எல்லாம் என் கனவில் தான் நடக்கும் என்று"
இனிதாய் மீண்டும் ஒரு .காதலர் தினம்.
வழமை போலவே இம்முறையும் இனிதாய் மீண்டும் ஒரு காதலர் தினம்.எத்தனையோ அஸ்தமனங்களும் உதயங்களும் ஆண்டுகள் பல கடந்தும் உறங்காமல் இதயத்தின் மூலையிலும் கல்லறையின் ஓரத்திலும் இன்னும் காத்திருக்கிறது காதலின் சாட்சிகளாக.ஆனாலும் எதுவுமே அறியாத பச்சிழங்குழந்தை போல வழமை போலவே இம்முறையும் இனிதாய் மீண்டும் ஒரு காதலர் தினம்.எத்தனையோ அஸ்தமனங்களும் உதயங்களும் ஆண்டுகள் பல கடந்தும் உறங்காமல் இதயத்தின் மூலையிலும் கல்லறையின் ஓரத்திலும் இன்னும் காத்திருக்கிறது காதலின் சாட்சிகளாக.ஆனாலும் எதுவுமே அறியாத பச்சிழங்குழந்தை போல மீண்டும் புதிதாக ஒரு காதலர் தினம்.
Friday, February 17, 2012
என் நினைவில் வந்த கனவுகள்)
கண்களை மூடி கவிதைகளை யோசித்தேன்கனவுகளாகி என் உள்ளத்தையே மூடி வைத்தாள்
கனவில் வந்த என்கண்மணியை நினைவில் காண ஆசை கொண்டு கலைத்தேன் என் கனவுகளை.
கலைந்தது என் கனவுகள் அல்ல
கற்பனையில் இருந்த அவளின் நினைவுகளும்தான்.காரிருள் அமாவாசை கடந்து கனிந்திடும் பௌர்ணமி வரும் என்று நீல வான சந்திரன் நினைப்பதை போல் என் கனவில் வந்தவள் ஒருநாள் என் நிஜத்தில் வருவாள் என்று ரவிச்சந்திரன் நானும் கற்பனை கொள்கிறேன்(நியம் அல்ல.என் நினைவில் வந்த கனவுகள்)
விடுகதையாகி இன்னும் விடை காணாத என் வாழ்க்கை
உள்ளத்தால் அழுது உதட்டால் சிரிக்குறேன்.என்னை உள்ளத்தால் அழவைத்த உன்னை கடவுள் என்கிறார்கள்.மற்றவர்களை உதட்டால் சிரிக்க வைக்க முயன்ற என்னை பைத்தியகாரன் என்கிறார்கள்.
கொடுப்பவன் நீ என்கிறேன்.புகழ்வது பிடிக்க வில்லை என்பாதாலோ என்னவோ என் சந்தோசத்தை மட்டும் எடுப்பவன் நீ ஆகிறாய்.
விரும்பி வந்த நட்பை விலக வைத்தாய்
விலகி சென்ற துன்பத்தை நெருங்க வைத்தாய்
நினைத்ததை முடிப்பவன் என்பதால் தானோ
முடிக்க நினைக்கிறாய் என் சந்தோசத்தை
வீழ்வதெல்லாம் எழுவதற்கு என்கிறார்கள்
ஆனாலும் வீழும்போதெல்லாம் விலகியே நிற்கிறார்கள்.எழுந்து நிற்கும் போது விரும்பியது போல் வருகிறார்கள்.வாழ்த்த அல்ல.தருணம் பார்த்து மீண்டும் வீழ்த்த.விரும்பிய போதெல்லாம் வித்தைகள் செய்ய விளையாட்டு பொம்மையா என் வாழ்க்கை
இரவியும் சந்திரனும் என் பெயரில் கலந்ததாலோ
இருளும் பகலும் இரண்டும் கலந்து
இன்பம் துன்பம் இரண்டும் இணைந்து
துன்பம் மட்டும் எஞ்சி நிற்கிறதோ
என்ன செய்வது நானும்
வழமைபோல் ஏக்கத்துடன்
நாளையாவது நன்றாக விடியும் என்ற எண்ணத்துடன்
காத்திருக்கிறேன் கண்களில் நீருடன்
"விலகியதெல்லாம் விரும்பி வரும் என்ற நம்பிக்கையில்"
கொடுப்பவன் நீ என்கிறேன்.புகழ்வது பிடிக்க வில்லை என்பாதாலோ என்னவோ என் சந்தோசத்தை மட்டும் எடுப்பவன் நீ ஆகிறாய்.
விரும்பி வந்த நட்பை விலக வைத்தாய்
விலகி சென்ற துன்பத்தை நெருங்க வைத்தாய்
நினைத்ததை முடிப்பவன் என்பதால் தானோ
முடிக்க நினைக்கிறாய் என் சந்தோசத்தை
வீழ்வதெல்லாம் எழுவதற்கு என்கிறார்கள்
ஆனாலும் வீழும்போதெல்லாம் விலகியே நிற்கிறார்கள்.எழுந்து நிற்கும் போது விரும்பியது போல் வருகிறார்கள்.வாழ்த்த அல்ல.தருணம் பார்த்து மீண்டும் வீழ்த்த.விரும்பிய போதெல்லாம் வித்தைகள் செய்ய விளையாட்டு பொம்மையா என் வாழ்க்கை
இரவியும் சந்திரனும் என் பெயரில் கலந்ததாலோ
இருளும் பகலும் இரண்டும் கலந்து
இன்பம் துன்பம் இரண்டும் இணைந்து
துன்பம் மட்டும் எஞ்சி நிற்கிறதோ
என்ன செய்வது நானும்
வழமைபோல் ஏக்கத்துடன்
நாளையாவது நன்றாக விடியும் என்ற எண்ணத்துடன்
காத்திருக்கிறேன் கண்களில் நீருடன்
"விலகியதெல்லாம் விரும்பி வரும் என்ற நம்பிக்கையில்"
Subscribe to:
Posts (Atom)
.gif)
.jpg)



.jpg)
